< Back
பிற விளையாட்டு
நார்வே செஸ் போட்டி: 4-வது சுற்றில் இந்திய வீரர் ஆனந்த் தோல்வி
பிற விளையாட்டு

நார்வே செஸ் போட்டி: 4-வது சுற்றில் இந்திய வீரர் ஆனந்த் தோல்வி

தினத்தந்தி
|
5 Jun 2022 2:16 AM IST

நார்வே செஸ் போட்டியின் 4- வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வி அடைந்து உள்ளார்.

ஸ்டாவஞ்சர்,

முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள கிளாசிக்கல் செஸ் போட்டி நார்வேயில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியனான இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த், அமெரிக்காவின் வெஸ்லி சோவை சந்தித்தார். இந்த ஆட்டம் 28-வது காய்நகர்த்தலில் டிராவில் முடிவடைந்தது. இதனை அடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க சடன்டெத் முறை கடைபிடிக்கப்பட்டது.

இதில் ஆனந்த் 46-வது காய்நகர்த்தலில் தோல்வி அடைந்தார். இந்த போட்டியில் முதல் 3 சுற்றுகளில் தொடர்ச்சியாக வெற்றி கண்ட ஆனந்த் சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். 4-வது சுற்று முடிவில் சென்னையை சேர்ந்த ஆனந்த், 'நம்பர் ஒன்' வீரரான மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) ஆகியோர் தலா 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகள்