< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை நிகத் ஸரீன் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்..!
|19 May 2022 3:17 PM IST
12-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடந்து வருகிறது.
இஸ்தான்புல்,
12-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 52 கிலோ உடல் எடைப்பிரிவின் அரைஇறுதியில் சிறப்பான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீராங்கனை நிகத் ஸரீன் 5-0 என்ற கணக்கில் பிரேசிலின் கரோலின் டி அல்மிடாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
57 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை மனிஷா 0-5 என்ற கணக்கில் டோக்கியோ ஒலோம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இர்மா டெஸ்டாவிடம்(இத்தாலி) தோல்வி கண்டு வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி கண்டார்.
63 கிலோ எடைப்பிரிவின் இரைஇறுதியில் இந்திய வீராங்கனை பர்வீன் 1-4 என்ற கணக்கில் அமை பிராட்ஹர்ஸ்டிடம் (அயர்லாந்து) தோலவி அடைந்து வெண்கலப்பதக்கம் பெற்றார்.