< Back
பிற விளையாட்டு
உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறிய நீத்து காங்காஸ்
பிற விளையாட்டு

உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறிய நீத்து காங்காஸ்

தினத்தந்தி
|
23 March 2023 7:14 PM IST

உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப் அரையிறுதியில் கஜகஸ்தான் வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் நீத்து காங்காஸ் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.



புதுடெல்லி,


டெல்லியில் உலக குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் 48 கிலோ எடை பிரிவில் இன்று நடந்த அரையிறுதி போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனை நீத்து காங்காஸ் மற்றும் கஜகஸ்தான் வீராங்கனை ஆலுவா பால்கிபெகோவா விளையாடினர்.

இந்த போட்டியில், முதல் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய கஜகஸ்தான் வீராங்கனை 2-3 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றார். எனினும், 2-வது சுற்றில் வலிமையுடன் மீண்டு வந்து, நீத்து அதிரடியாக தாக்குதல் முறையை கையாண்டார்.

கடைசி 3 நிமிடங்களில் நீத்து தொடர்ந்து அதிரடியாக செயல்பட்டார். இதனால் இருவருக்கும் இடையே ஒரு பதற்றம் காணப்பட்டது. இதனை தொடர்ந்து, போட்டியில் மறு ஆய்வு செய்யப்பட்டது.

போட்டி முடிவில் நீத்து 5-3 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார். இதனை அடுத்து இந்திய வீராங்கனை நீத்து இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதனால், பதக்கம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்