< Back
பிற விளையாட்டு
லாசேன் டைமண்ட் லீக்கில் கலந்து கொள்ளும் நீரஜ் சோப்ரா

கோப்புப்படம் 

பிற விளையாட்டு

லாசேன் டைமண்ட் லீக்கில் கலந்து கொள்ளும் நீரஜ் சோப்ரா

தினத்தந்தி
|
18 Aug 2024 9:36 PM IST

டைமண்ட் லீக் தடகள போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள லாசேன் நகரில் வரும் 22-ந் தேதி தொடங்குகிறது.

லாசேன்,

டைமண்ட் லீக் தடகள போட்டி சுவிட்சர்லாந்தில் உள்ள லாசேன் நகரில் வரும் 22-ந் தேதி தொடங்குகிறது. சமீபத்தில் நடந்த பாரீஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, கடந்த ஒரு ஆண்டாக காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். அவர் ஒலிம்பிக் போட்டி முடிந்தவுடன் தனது காயத்துக்கு சிகிச்சை பெற ஜெர்மனி சென்றார்.

அதன் காரணமாக அவர் அடுத்தடுத்து நடக்கும் போட்டி தொடர்களில் கலந்து கொள்வாரா? என்ற சந்தேகம் நிலவியது. இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் நடைபெறும் டைமண்ட் லீக் தடகள போட்டி தொடரில் கலந்து கொள்ள உள்ளதாக நீரஜ் சோப்ரா கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, லாசேன் நகரில் வருகிற 22-ந் தேதி நடக்கும் டைமண்ட் லீக் போட்டியில் பங்கேற்க முடிவெடுத்து இருக்கிறேன். இந்த சீசன் முடிந்தவுடன் எனது காயத்துக்கான இறுதி கட்ட சிகிச்சையை மேற்கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்