< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
தேசிய ஸ்னூக்கர் போட்டி: மத்திய பிரதேச வீராங்கனை அமீ கமானி 'சாம்பியன்'
|11 Dec 2023 5:02 AM IST
அடுத்து 15 ரெட் ஸ்னூக்கர் மற்றும் பில்லியர்ட்ஸ் போட்டிகள் நடக்க உள்ளன.
சென்னை,
90-வது தேசிய பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டி பல்வேறு பிரிவுகளில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் 6-ரெட் ஸ்னூக்கர் இறுதி சுற்றில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அமீ கமானி 4-1 என்ற கணக்கில் தமிழகத்தின் அனுபமா ராமச்சந்திரனை தோற்கடித்து மீண்டும் சாம்பியன் கோப்பையை வென்றார்.
இதன் ஆண்கள் பிரிவில் மல்கீத் சிங் (ரெயில்வே அணி) வெற்றி பெற்றார். அடுத்து 15 ரெட் ஸ்னூக்கர் மற்றும் பில்லியர்ட்ஸ் போட்டிகள் நடக்க உள்ளன.