< Back
பிற விளையாட்டு
தேசிய ஜிம்னாஸ்டிக்ஸ்: சென்னை பள்ளி மாணவி 3 வெண்கலம் வென்றார்
பிற விளையாட்டு

தேசிய ஜிம்னாஸ்டிக்ஸ்: சென்னை பள்ளி மாணவி 3 வெண்கலம் வென்றார்

தினத்தந்தி
|
12 Oct 2022 1:48 AM IST

தேசிய ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் சென்னை பள்ளி மாணவி 3 வெண்கலப் பதக்கம் வென்றார்.

சென்னை,

சி.ஐ.எஸ்.சி.இ.க்கு உட்பட்ட பள்ளிகளுக்கான தேசிய ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி மும்பையில் நடந்தது. இதில் 14 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஆர்டிஸ்டிக் பந்தயத்தில் சென்னை அடையாறில் உள்ள செயின்ட் மைக்கேல்ஸ் அகாடமியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஓசியானா ரினீ தாமஸ் 'அன்இவன் பார்ஸ்' மற்றும் 'வால்ட்' பிரிவுகளில் வெண்கலப்பதக்கமும், 'ஆல்-ரவுண்ட்' பிரிவில் வெண்கலப்பதக்கமும் வென்றார்.

மேலும் செய்திகள்