< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
தேசிய விளையாட்டுப் போட்டி - 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் தங்கம் வென்றார்
|5 Oct 2022 3:55 AM IST
மகளிர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் தங்கம் சென்று அசத்தினார்.
காந்திநகர்,
36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் தங்கம் சென்று அசத்தினார்.
பந்தய தூரமான 200 மீட்டரை சுமார் 23 வினாடிகளை கடந்து அர்ச்சனா சுசீந்திரன் வெற்றி பெற்றார். அசாமைச் சேர்ந்த முன்னனி வீராங்கனை ஹிமா தாஸை பின்னுக்கு தள்ளி அர்ச்சனா தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.