< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
தேசிய செஸ் போட்டி: தமிழக வீராங்கனை ஷர்வானிகா 'சாம்பியன்'
|14 Oct 2022 1:53 AM IST
தேசிய செஸ் போட்டியில் தமிழக வீராங்கனை ஷர்வானிகா ‘சாம்பியன்’ பட்டத்தை வென்றார்.
சென்னை,
7 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஓபன் மற்றும் பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத்தில் நடந்தது. இதில் தமிழக வீராங்கனை ஷர்வானிகா 11 சுற்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 11 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.
ஷர்வானிகா அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் ஷர்வானிகா 8 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.