< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீசங்கர் தங்கம் வென்றார்
|25 May 2023 3:49 AM IST
கிரீஸ் நாட்டின் ஏதென்சில், சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டி நேற்று நடந்தது.
ஏதென்ஸ்,
கிரீஸ் நாட்டின் ஏதென்சில், சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டி நேற்று நடந்தது. இதில் களமிறங்கிய இந்திய வீரரான நடப்பு சாம்பியன் முரளி ஸ்ரீசங்கர் 8.18 மீட்டர் நீளம் தாண்டி மீண்டும் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். இந்த சீசனில் அவரது சிறந்த செயல்பாடு இதுவாகும்.
மற்றொரு இந்திய வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் 7.85 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப்பதக்கமும், ஆஸ்திரேலியாவின் ஜாலென் ருக்கெர் வெண்கலப்பதக்கமும் (7.80 மீட்டர்) பெற்றனர்.