< Back
பிற விளையாட்டு
செஸ்  கேண்டிடேட் பட்டம் வென்ற சர்வாணிகாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வாழ்த்து
பிற விளையாட்டு

செஸ் கேண்டிடேட் பட்டம் வென்ற சர்வாணிகாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வாழ்த்து

தினத்தந்தி
|
12 July 2024 7:39 PM IST

சர்வாணிகாவின் வெற்றிப் பயணம் தொடர அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்'தெரிவித்துள்ளார்.

சென்னை,

செஸ் கேண்டிடேட் பட்டம் வென்ற சர்வாணிகாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்ன் இன்று நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

செஸ் விளையாட்டில் மிக இளம் வயதிலேயே' செஸ் கேண்டிடேட் மாஸ்டர் ' பட்டத்தை வென்ற அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த தங்கை சர்வாணிகாவை இன்று நேரில் வாழ்த்தினோம். உலகளாவிய போட்டிகளில் தடம் பதித்து தமிழ்நாட்டிற்கும் - இந்தியாவிற்கும் தங்கை சர்வாணிகா தொடர்ந்து பெருமை சேர்த்து வருவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.தங்கை சர்வாணிகாவின் வெற்றிப் பயணம் தொடர என் அன்பும், வாழ்த்தும்.என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்