< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
ஆசிய விளையாட்டு: ஓட்டப்பந்தயம் போட்டியில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து இரு பதக்கங்கள்
|1 Oct 2023 6:21 PM IST
ஆசிய விளையாட்டு தொடரில் 1,500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து இரு பதக்கங்கள் கிடைத்துள்ளது.
பெய்ஜிங்,
ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் 1,500 மீட்டருக்கான ஓட்ட பந்தயத்தில் இந்தியா வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.
இந்தியாவின் அஜய்குமார் வெள்ளி பதக்கமும், ஜான்சன் வெண்கல பதக்கமும் வென்று அசத்தினர். பந்தய இலக்கை 3:38.94 மற்றும் 3:39.74 நேரத்தில் எட்டி பதக்கங்களை இரு வீரர்களும் வென்றனர்.