< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
உலக டேபிள் டென்னிஸ்: இந்திய வீராங்கனை மணிகா பத்ரா தோல்வி
|25 May 2023 2:58 AM IST
உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடந்து வருகிறது.
டர்பன்,
உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 39-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா, 13-வது இடத்தில் உள்ள அட்ரினா டியாஸ்சை (புயர்டோரிகோ) சந்தித்தார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மணிகா பத்ரா 11-6, 10-12, 9-11, 11-6, 11-13, 11-9, 3-11 என்ற செட் கணக்கில் அட்ரினாடியாஸ்சிடம் போராடி வீழ்ந்து நடையை கட்டினார்.