< Back
பிற விளையாட்டு
உலக டேபிள் டென்னிஸ் தரவரிசை: சத்யன்- மணிகா பத்ரா ஜோடி புதிய சாதனை

Image Courtesy: PTI 

பிற விளையாட்டு

உலக டேபிள் டென்னிஸ் தரவரிசை: சத்யன்- மணிகா பத்ரா ஜோடி புதிய சாதனை

தினத்தந்தி
|
8 Nov 2022 9:19 PM IST

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி முதல் 5 இடங்களுக்குள் முன்னேறுவது இதுவே முதல் முறையாகும்.

புதுடெல்லி,

உலக டேபிள் டென்னிஸ் தரவரிசையில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்யன் ஞானசேகரன்- மணிகா பத்ரா ஜோடி முதல் முறையாக 5-வது இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளனர். கலப்பு இரட்டையர் பிரிவில் ஒரு இந்திய ஜோடி முதல் 5 இடங்களுக்குள் முன்னேறுவது இதுவே முதல் முறையாகும்.

உலக டேபிள் டென்னிஸ் 'கன்டெண்டர்' தொடர் சுலோவேனியாவில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்யன், மணிகா ஜோடி வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்ததை தொடர்ந்து அவர்கள் உலக தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

இந்த தொடரின் இறுதி போட்டியில் இந்தியாவின் சத்யன் ஞானசேகரன், மணிகா பத்ரா ஜோடி, தென் கொரியாவின்ஷின் யுபின், லிம் ஜோங்ஹூன் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 7-11 என இழந்த இந்திய ஜோடி, அடுத்த இரு செட்களை 7-11, 5-11 எனக் இழந்தனர். முடிவில் சத்யன், மணிகா ஜோடி 0-3 (7-11, 7-11, 5-11) என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.

மேலும் செய்திகள்