< Back
பிற விளையாட்டு
மலேசியா ஓபன் பேட்மிண்டன்; ஜோனாடன் கிறிஸ்டியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஸ்ரீகாந்த்..!

image courtesy; @srikidambi

பிற விளையாட்டு

மலேசியா ஓபன் பேட்மிண்டன்; ஜோனாடன் கிறிஸ்டியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஸ்ரீகாந்த்..!

தினத்தந்தி
|
9 Jan 2024 12:50 PM IST

மலேசியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று முதல் 14-ந் தேதி வரை நடக்கிறது.

கோலாலம்பூர்,

மலேசியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று முதல் 14-ந் தேதி வரை நடக்கிறது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வீரர், வீராங்கனைகள் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் தரவரிசையில் டாப்-16 இடங்களுக்குள் இருக்க வேண்டியது அவசியமானதாகும். இதனால் இனி வரும் சர்வதேச போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதலாவது சுற்று (ரவுண்ட் ஆப் 32) ஆட்டத்தில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் இந்தோனேசிய வீரர் ஜோனாடன் கிறிஸ்டியை 12-21, 21-18, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் ஆப் 16) முன்னேறினார். நாளை நடைபெறும் ரவுண்ட் ஆப் 16 சுற்றில் ஹாங்காங் வீரர் அங்கஸ் ங் க லாங் உடன் மோத உள்ளார்.

மேலும் செய்திகள்