< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
மலேசிய ஓபன் பேட்மிண்டன்; சாத்விக் சாய்ராஜ்-சிராக் ஷெட்டி ஜோடி அரை இறுதிக்கு முன்னேற்றம்
|14 Jan 2023 4:15 PM IST
மலேசிய ஓபன் பேட்மிண்டனின் கால் இறுதி சுற்றில் சாத்விக் சாய்ராஜ்-சிராக் ஷெட்டி ஜோடி வெற்றி பெற்றது.
கோலாலம்பூர்,
மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவு கால்இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் லி யு சென்- ஓ ஸியான் யி ஜோடியுடன் மோதியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 17-21, 22-20, 21-9 என்ற செட் கணக்கில் சீன அணியை வீழ்த்தி அறை இறுதிக்கு முன்னேறியது. 66 நிமிடங்களில் வெற்றியை சுவைத்த சாத்விக்-சிராக் ஷெட்டி அரை இறுதி சுற்றில் சீனாவின் லியாங் வெய் கெங்- வாங் சாங் ஆகியோரை சந்திக்கிறார்கள்.