< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
மலேசியா ஓபன் பேட்மிண்டன் : இந்தியாவின் பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
|29 Jun 2022 5:11 PM IST
பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மலேசியாவின் கோலாலம்பூரில் மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டிஇன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி. சிந்து ,தாய்லாந்து நாட்டின் பிட்டயபோர்ன் சாய்வான் ஆகியோர் மோதினர்,
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 21-13,21-17 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார்.இதனால் அவர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றோரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் , அமெரிக்க வீராங்கனை ஐரிஸ் வாங் உடனான மோதலில் உலகின் 11-21 17-21 என்ற கணக்கில் சாய்னா நேவால் தோல்வி அடைந்து வெளியேறினார்.