< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
மலேசிய ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக்ஷெட்டி ஜோடி தோல்வி
|15 Jan 2023 2:16 AM IST
இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி சீனாவின் லியாங் வெய் கெங்- வாங் சாங் இணையிடம் போராடி தோல்வி அடைந்தது.
கோலாலம்பூர்,
மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 16-21, 21-11, 15-21 என்ற செட் கணக்கில் சீனாவின் லியாங் வெய் கெங்- வாங் சாங் இணையிடம் போராடி தோல்வி அடைந்தது.
திரில்லிங்கான இந்த ஆட்டம் 64 நிமிடங்கள் நீடித்தது. இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
பெண்கள் ஒற்றையரில் அகானே யமாகுச்சி (ஜப்பான்), அன்சே யங் (தென்கொரியா), ஆண்கள் ஒற்றையரில் கோடாய் நராகா (ஜப்பான்), ஒலிம்பிக் சாம்பியன் விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) ஆகியோர் தங்களது அரைஇறுதி ஆட்டங்களில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர்.