< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
மலேசிய ஓபன் பேட்மிண்டன்: சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
|13 Jan 2024 2:14 AM IST
நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் ரென் ஜியாங் யு - ஹீ ஜிங் டிங் ஜோடியுடன் மோதியது.
கோலாலம்பூர்,
மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் ரென் ஜியாங் யு - ஹீ ஜிங் டிங் ஜோடியுடன் மோதியது.
இந்த ஆட்டத்தில் சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி, 21-11, 21-8 என்ற நேர்செட்டில் சீனாவின் ரென் ஜியாங் யு - ஹீ ஜிங் டிங் ஜோடியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.
பெண்கள் இரட்டையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா - தனிஷா கிரஸ்டோ ஜோடி, ஜப்பானின் ரின் இவானகா - கி நகானிஷி இணையுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் அஸ்வினி - தனிஷா ஜோடி,15-21, 13-21 என்ற நேர்செட்டில் ஜப்பானின் ரின் இவானகா - கி நகானிஷி இணையிடம் தோல்வியடைந்தது.