< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
மலேசிய ஓபன் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி போராடி தோல்வி
|14 Jan 2024 10:59 PM IST
சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடியை வீழ்த்தி, வாங் சாங் - லியாங் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
கோலாலம்பூர்,
மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி, உலக தரவரிசையில் முதல் இடம் வகிக்கும் சீனாவின் வாங் சாங் - லியாங் வெய் கெங் ஜோடியுடன் மோதியது.
1 மணிநேரம் 58 நிமிடம் நீடித்த இந்த போட்டியில் இந்திய ஜோடி போராடி தோல்வியடைந்தது. 21-9 என்று முதல் செட்டை சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி கைப்பற்றிய நிலையில், 21-18, 21-17 என்று அடுத்த இரண்டு செட்களையும் சீன ஜோடி கைப்பற்றியது. இதையடுத்து 9-21, 21-18, 21-17 என்ற செட் கணக்கில் சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடியை வீழ்த்தி, வாங் சாங் - லியாங் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.