< Back
பிற விளையாட்டு
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரைஇறுதியில் தோல்வி

PV Sindhu (image courtesy: BAI Media via ANI)

பிற விளையாட்டு

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரைஇறுதியில் தோல்வி

தினத்தந்தி
|
28 May 2023 1:43 AM IST

மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது.

கோலாலம்பூர்,

மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், இந்தோனேஷியாவின் கிறிஸ்டியன் அதிநடாவை சந்தித்தார்.

முதல் செட்டில் பிரனாய் 19-17 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது பந்தை துள்ளி அடித்த கிறிஸ்டியன் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவருக்கு இடது முழங்காலில் காயம் அடைந்து வெளியேறினார். இதனையடுத்து பிரனாய் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த ஆண்டில் பிரனாய் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருப்பது இதுவே முதல்முறையாகும்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 14-21, 17-21 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியாவின் கிரிகோரியா மாரிஸ்கா துன்ஜூங்கிடம் வீழ்ந்து நடையை கட்டினார்.

மேலும் செய்திகள்