< Back
பிற விளையாட்டு
மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பிரனாய் அரையிறுதிக்கு முன்னேற்றம்..!
பிற விளையாட்டு

மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பிரனாய் அரையிறுதிக்கு முன்னேற்றம்..!

தினத்தந்தி
|
9 July 2022 4:39 AM IST

நேற்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் ஜப்பான் வீரர் கன்டா சுமேயமாவுடன் மோதினார்.

கோலாலம்பூர்,

மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் ஜப்பான் வீரர் கன்டா சுமேயமாவுடன் மோதினார்.

இந்த காலிறுதி ஆட்டத்தில் எச்.எஸ்.பிரனாய் 25-23, 22-20 என்ற நேர்செட்டில் கன்டா சுமேயமாவை வீழ்த்தி அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

மேலும் செய்திகள்