< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன்: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு தகுதி
|26 Sept 2024 6:46 AM IST
ஸ்ரீகாந்த 2-வது சுற்றில் சக நாட்டவரான ஆயுஷ் ஷெட்டியுடன் மோத உள்ளார்.
மக்காவ்,
மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், இஸ்ரேலின் டேனில் டுபோவெங்கோ உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்ரீகாந்த் 21-14, 21-15 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
2-வது சுற்றில் ஸ்ரீகாந்த் சக நாட்டவரான ஆயுஷ் ஷெட்டி உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.