< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் காலிறுதியில் தோல்வி
|27 Sept 2024 5:45 PM IST
மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.
மக்காவ்,
மக்காவ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த், ஹாங்காங்கை சேர்ந்த அங்கஸ் கே.எல். என்ஜி உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அங்கஸ் 21-16 மற்றும் 21-12 என்ற நேர் செட் கணக்கில் ஸ்ரீகாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
தோல்வியடைந்த ஸ்ரீகாந்த் காலிறுதி சுற்றோடு நடையை கட்டினார்.