லைவ் அப்டேட்ஸ்; குதிரையேற்றத்தில் இந்தியாவிற்கு வெண்கல பதக்கம்..!
|ஆசிய விளையாட்டு போட்டியில் குதிரையேற்றம் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்துள்ளது.
Live Updates
- 28 Sept 2023 8:14 PM IST
ஆசிய விளையாட்டு: ஹாக்கி போட்டியில் ஜப்பானை வீழ்த்தியது இந்தியா
ஆசிய விளையாட்டு தொடரின் ஆடவர் ஹாக்கி போட்டியில் குரூப் ஏ பிரிவில் இந்தியாவும் ஜப்பானும் மோதின. இதில் 4-2 என்ற கணக்கில் ஜப்பானை இந்திய அணி வீழ்த்தியது. இந்திய அணியில் அபிஷேக் சிங் இரண்டு கோல்களும், மன்தீப் சிங் மற்றும் அமித் ரோகிதாஸ் தலா ஒரு கோலும் அடித்தனர். முதல் நிலை சுற்றில் ஜப்பானை வீழ்த்திய இந்திய அணி வரும் 30 ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
- 28 Sept 2023 7:51 PM IST
நீச்சல் போட்டியில் இந்திய அணி மீண்டும் தோல்வி
ஆசிய விளையாட்டு தொடரில், மகளிர் 4 x 200m ஃப்ரீ ஸ்டைல் ரிலே நீச்சல் போட்டியில் இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்றன. இதில் இந்திய அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது. நீச்சல் போட்டி குரூப் பிரிவில் இந்திய மகளிர் அணி தொடர்ந்து தோல்வியை தழுவி வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
- 28 Sept 2023 7:47 PM IST
ஹாக்கி: ஆசிய விளையாட்டு தொடரில் தற்போது நடைபெற்று வரும் ஹாக்கி போட்டியில் இந்தியாவும் ஜப்பான் அணியும் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தி வர்இந்திய அணி 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
- 28 Sept 2023 7:26 PM IST
குத்துச்சண்டை: 71 கிலோ எடைப்பிரிவில் வியட்நாமின் பிடி புய்- என்ற வீரரை தோற்கடித்த இந்தியாவின் நிஷாந்த் தேவ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- 28 Sept 2023 7:00 PM IST
கால்பந்து போட்டியில் இந்திய அணிக்கு ஏமாற்றம்
ஆசிய விளையாட்டு தொடரில் இன்று நடைபெற்ற கால்பந்து 16-வது சுற்று ஆட்டத்தில் இந்திய அணியும் சவுதி அரேபியாவும் மோதின. இந்த போட்டியில் 0-2 என்ற கணக்கில் இந்திய அணி சவுதி அரேபியாவிடம் தோல்வியை தழுவியது. இதன் மூலம் போட்டி தொடரில் இருந்து இந்தியா வெளியேறியது.
- 28 Sept 2023 6:30 PM IST
கால்பந்து போட்டி; இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சவுதி அரேபியா அணி 2 கோல்களை அடித்து, முன்னிலையில் உள்ளது.
- 28 Sept 2023 5:49 PM IST
கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டி: இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது
டென்னிஸ்; கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபன்னா / ருதுஜா போசலே ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்கு குறைந்தபட்சம் வெண்கலம் பதக்கமாவது கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
காலிறுதி போட்டியில் கஜகஸ்தான் நாட்டின் க்ரிகோரி லோமகின் மற்றும் ஜிபேக் குலம்பயேவா ஜோடியை 7-5,6-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தியது. 1 மணி நேரம் 24 நிமிடம் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா வெற்றியை ருசித்தது.
- 28 Sept 2023 5:42 PM IST
25 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 5-வது இடம்
ஆசிய விளையாட்டு தொடரில் இந்திய அணி தொடர்ந்து பதக்க வேட்டையை நடத்தி வருகிறது. இந்திய அணி தற்போது வரை 25 பதக்கங்களுடன் பட்டியலில் 5 ஆம் இடத்தில் உள்ளது. பதக்க பட்டியலின் விவரம் வருமாறு
- சீனா : 85 தங்கம், 49 வெள்ளி பதக்கம், 26 வெண்கலம்- மொத்த பதக்கங்கள்; 160
- தென்கொரியா: 21 தங்கம், 20 வெள்ளி, 38 வெண்கலம்: மொத்த பதக்கங்கள்; 79
- ஜப்பான்: 18 தங்கம், 29 வெள்ளி, 27 வெண்கலம்- மொத்த பதக்கங்கள்: 74
- உஸ்பெஸ்கிஸ்தான்: தங்கம் 6, வெள்ளி 10, வெண்கலம் 11- மொத்த பதக்கங்கள் :31
- இந்தியா: தங்கம் 6, வெள்ளி 8, வெண்கலம் 11- மொத்த பதக்கங்கள்: 25
- 28 Sept 2023 5:03 PM IST
ஸ்குவாஷ் ஆண்கள் அணி 3-0 என்ற புள்ளிகளின் அடிப்படையில் நேபாள அணியை வீழ்த்தியது.