< Back
பிற விளையாட்டு
சென்னை ஓபனில் பட்டம் வென்ற லின்டா தரவரிசையில் 56 இடம் முன்னேற்றம்
பிற விளையாட்டு

சென்னை ஓபனில் பட்டம் வென்ற லின்டா தரவரிசையில் 56 இடம் முன்னேற்றம்

தினத்தந்தி
|
20 Sept 2022 3:30 AM IST

சென்னை ஓபன் டென்னிசில் சாம்பியன் கோப்பையை வென்று அசத்திய 17 வயதான செக்குடியரசின் லின்டா 56 இடங்கள் முன்னேறி 74-வது இடத்தை பிடித்துள்ளார்.

நியூயார்க்,

சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் முதல் 20 இடங்களில் எந்த மாற்றமும் இல்லை. ஸ்பெயின் 'இளம் புயல்' கார்லஸ் அல்காரஸ் முதலிடத்திலும், நார்வேயின் கேஸ்பர் ரூட் 2-வது இடத்திலும், ஸ்பெயினின் ரபெல் நடால் 3-வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.

பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் இகா ஸ்வியாடெக் (போலந்து) முதலிடத்திலும், ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா) 2-வது இடத்திலும், அனெட் கோன்டாவெய்ட் (எஸ்தோனியா) 3-வது இடத்திலும் தொடருகிறார்கள்.

சென்னை ஓபன் டென்னிசில் சாம்பியன் கோப்பையை வென்று அசத்திய 17 வயதான செக்குடியரசின் லின்டா புருவிர்தோவா கிடுகிடுவென 56 இடங்கள் முன்னேறி 74-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சிறந்த தரநிலை இதுவாகும். இறுதி ஆட்டத்தில் அவரிடம் போராடி தோற்ற மேக்டா லினெட் (போலந்து) 16 இடங்கள் ஏற்றம் கண்டு 51-வது இடத்தை பெற்றுள்ளார்.

மேலும் செய்திகள்