< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
லாசேன் டைமண்ட் லீக்; 2வது இடம் பிடித்த நீரஜ் சோப்ரா
|23 Aug 2024 7:51 AM IST
நீரஜ் சோப்ரா அண்மையில் நடைபெற்று முடிந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார்.
லாசேன்,
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, அண்மையில் நடைபெற்று முடிந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கத்தைக் கைப்பற்றி சாதனை படைத்தார். இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் நடைபெற்ற லாசேன் டைமண்ட் லீக் தொடரில் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார்.
இதில் நீரஜ் சோப்ரா 89.49 மீட்டர் ஈட்டி எறிந்து லாசேன் டைமண்ட் லீக்கில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.61 மீட்டர் எறிந்து முதல் இடம் பிடித்தார். ஜெர்மனியின் ஜூலியன் வெபர் (87.08 மீட்டர்) மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.