< Back
பிற விளையாட்டு
கொரியா ஓபன் பேட்மிண்டன் - இந்தியாவின்  சாத்விக், சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

Image Courtesy ; BAI Media 

பிற விளையாட்டு

கொரியா ஓபன் பேட்மிண்டன் - இந்தியாவின் சாத்விக், சிராக் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
21 July 2023 6:18 PM IST

அரையிறுதியில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, ஜப்பான் ஜோடியை எதிர்கொள்கிறது.

யோசு,

கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி யோசு நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 21-14, 21-17 என்ற நேர்செட்டில் ஜப்பானின் டகுரோ ஹோகி, யூகோ கொபாயஷி இணையை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

நாளை நடைபெறும் அரையிறுதியில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டிஜோடி, ஜப்பான் ஜோடியை எதிர்கொள்கிறது.

மேலும் செய்திகள்