கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நிறைவு - 97 பதக்கங்களுடன் 2வது இடம் பிடித்தது தமிழ்நாடு அணி
|38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என 97 பதக்கங்களுடன் தமிழ்நாடு அணி 2வது இடம் பிடித்தது.
சென்னை,
6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி (18 வயதுக்குட்பட்டோர்) சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் நடைபெற்றது . கடந்த 19 -ம் தேதி இந்த விளையாட்டு போட்டிகள் தொடங்கின. இந்நிலையில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்ற இந்த கேலோ இந்தியா போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தன.
இந்த போட்டியில் 55 தங்கம், 48 வெள்ளி, 53 வெண்கலம் என 156 பதக்கங்களுடன் மராட்டிய அணி முதலிடம் பிடித்தது.
38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என 97 பதக்கங்களுடன் தமிழ்நாடு அணி 2வது இடம் பிடித்தது.
35 தங்கம், 22 வெள்ளி, 46 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் அரியானா அணி 3வது இடம் பிடித்துள்ளது .
மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நிறைவு விழா நடைபெறுகிறது. மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்குகிறார்கள்.