பிறந்தநாளில் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்
|பிரதமர் மோடிக்கு இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் பாராட்டுக்களை தெரிவித்தார்.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு சர்வதேச தலைவர்கள் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை வாழ்த்து கூறினர்.
இதனிடையே பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிடப்பட்டிருந்தன. இதன் ஒரு பகுதியாக, நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட 3 பெண் சீட்டாக்கள் மற்றும் 5 ஆண் சீட்டாக்கள் என மொத்தம் 8 சீட்டாக்களை குனோ தேசிய வனவிலங்கு பூங்காவில் திறந்து விடும் நிகழ்ச்சியும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சீட்டாக்களை மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்யும் திட்டத்திற்கு உதவிய நமீபியா அரசு நன்றி தெரிவித்து கொண்டார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் பாராட்டுக்களை தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்பில் பிரதமர் மோடியின் முன்னெடுப்புகள் பாராட்டுக்குரியது! இது என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்று. என்ன ஒரு அற்புதமான மனிதர்! உங்கள் வழியை அனைத்து தலைவர்களும் பின்பற்ற வேண்டும்" என்று கெவின் பீட்டர்சன் இந்தியில் பதிவிட்டுள்ளார்.