< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
சிகாகோவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் கெல்வின் கிப்டம் புதிய சாதனை
|11 Oct 2023 3:07 AM IST
சிகாகோவில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கென்ய வீரர் கெல்வின் கிப்டம் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கென்யாவைச் சேர்ந்த வீரர் கெல்வின் கிப்டம் புதிய உலக சாதனையை படைத்துள்ளார். மொத்தம் 35 கி.மீ. கொண்ட இந்த மாரத்தான் ஓட்டத்தில், பந்தய தூரத்தை 2 மணி நேரம் 35 வினாடிகளில் கடந்து கெல்வின் கிப்டம் முதலிடம் பிடித்தார். இதன் மூலம் மற்றொரு கென்ய வீரர் எலியுட் கிப்சோஜின் சாதனையை கெல்வின் முறியடித்துள்ளார்.
இந்த போட்டியில் கென்யாவைச் சேர்ந்த பென்சன் கிப்ருட்டோ 2-வது இடத்தையும், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பஷீர் அப்தி 3-வது இடத்தையும் பிடித்தனர். இதற்கு முன் கடந்த 2012-ம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில், கென்ய வீரர் எலியுட் கிப்சோஜ் பந்தய தூரத்தை 2 மணி நேரம் 1 நிமிடம் 9 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.