< Back
பிற விளையாட்டு
மாநில அளவிலான ஆணழகன் போட்டி; கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் தேர்வு
பிற விளையாட்டு

மாநில அளவிலான ஆணழகன் போட்டி; கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் தேர்வு

தினத்தந்தி
|
28 Jun 2022 5:27 PM IST

திருக்கோவிலூரில் நடைபெற்ற மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் 150 பேர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி:

திருக்கோவிலூர் நகர இளைஞரணி சார்பில் மாநில அளவிலான மாபெரும் ஆணழகன் போட்டி திருக்கோவிலூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மத்திய மாவட்ட கழக துணைச் செயலாளரும், திருக்கோவிலூர் நகர மன்ற தலைவருமான டி. என்.முருகன் தலைமை தாங்கினார்.

போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். போட்டியின் முடிவில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அன்கிரிஷ் பிரசாத் ஆணழகனாக தேர்வு செய்யப்பட்டார். சென்னையை சேர்ந்த ராஜ்குமார் உடல்தகுதி தேர்வில் முதலிடம் பிடித்தார்.

இதேபோல் பல்வேறு பிரிவுகளின் கீழ் தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பொன்.கவுதமசிகாமணி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.

மேலும் செய்திகள்