< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி கால்இறுதிக்கு தகுதி
|28 July 2023 3:56 AM IST
சாத்விக்-சிராக் 21-17, 21-11 என்ற நேர்செட்டில் டென்மார்க் அணியை வீழ்த்தினர்.
டோக்கியோ,
ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, டென்மார்க்கின் லாஸ்சி மொல்ஹிடி-ஜேப்பி பாய் இணையை சந்தித்தது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாத்விக்-சிராக் 21-17, 21-11 என்ற நேர்செட்டில் டென்மார்க் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர். இந்த வெற்றியின் மூலம் சாத்விக்-சிராக் ஜோடி கால்இறுதிக்கு தகுதி பெற்றது.