< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் பிரனாய்
|31 Aug 2022 8:32 AM IST
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் தகுதி பெற்றார்.
இந்திய வீரர் பிரனாய் முதல் சுற்றில் என்ஜி கா லாங் அங்கஸ் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் என்ஜி கா லாங் அங்கஸ்காயத்துடன் பாதியில் வெளியேறினார். இதனால் பிரனாய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. உலக தரவரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் பிரனாய் இரண்டாவது சுற்றில் முன்னாள் உலக சாம்பியனான சிங்கப்பூரின் லோ கீன் யூவை எதிர்கொள்கிறார்.
இன்று நடைபெறவுள்ள பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகளான அஷ்வினி பட் மற்றும் ஷிகா கவுதம் ஆகியோர் கொரிய ஜோடியான பேக் ஹா நா மற்றும் லீ யூ லிம் உடன் மோத உள்ளனர்.