< Back
பிற விளையாட்டு
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: பிரனாய், ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு தகுதி

Image Courtesy : @BAI_Media twitter

பிற விளையாட்டு

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: பிரனாய், ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு தகுதி

தினத்தந்தி
|
26 July 2023 5:51 AM IST

முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஸ்ரீகாந்த் சீன தைபேயின் சோய் டின் சென்னினை தோற்கடித்தார்.

டோக்கியோ,

ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 21-17, 21-13 என்ற நேர்செட்டில் சீனாவின் லீ ஷி பெங்கை விரட்டியடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஸ்ரீகாந்த் 21-13, 21-13 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் சோய் டின் சென்னினை தோற்கடித்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை ஆகார்ஷி காஷ்யப் 17-21, 17-21 என்ற நேர்செட்டில் நம்பர் ஒன் வீராங்கனை அகானே யமாகுச்சியிடம் (ஜப்பான்) பணிந்தார்.

பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் 11-21, 21-15, 21-14 என்ற செட் கணக்கில் ஜப்பானின் சயகா ஹோபரா-யுய் சுய்சூ இணையை சாய்த்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தது.

மேலும் செய்திகள்