< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: 21 வயது சரப்ஜோத் சிங் தங்கம் வென்றார்
|23 March 2023 1:57 AM IST
மற்றொரு இந்திய வீரர் வருண் தோமர் 3-வது இடத்தை பெற்று வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்தினார்.
போபால்,
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி மத்தியபிரதேச மாநிலம் போபாலில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் 21 வயதான சரப்ஜோத் சிங் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இறுதி சுற்றில் இலக்கை நோக்கி மிகத் துல்லியமாக சுட்டு புள்ளிகளை திரட்டிய சரப்ஜோத் சிங், அஜர்பைஜானின் ரஸ்லான் ருனெவை பின்னுக்கு தள்ளினார். சரப்ஜோத்சிங் 253.2 புள்ளிகளுடன் முதலிடமும், ரஸ்லான் ருனெவ் 251.9 புள்ளிகளுடன் 2-வது இடமும் பிடித்தனர். மற்றொரு இந்திய வீரர் வருண் தோமர் 250.3 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பெற்று வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்தினார்.
பெண்களுக்கான ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய நட்சத்திர வீராங்கனை மானு பாகெர், திவ்யா சுப்பராஜூ, ரிதம் சாங்வான் ஆகியோர் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தனர்.