< Back
பிற விளையாட்டு
இந்திய மல்யுத்த சம்மேளன இடைக்கால கமிட்டி கலைப்பு - ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு

கோப்புப்படம் 

பிற விளையாட்டு

இந்திய மல்யுத்த சம்மேளன இடைக்கால கமிட்டி கலைப்பு - ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு

தினத்தந்தி
|
19 March 2024 2:02 AM IST

இந்திய மல்யுத்த சம்மேளனத்தை நிர்வகிக்க நியமிக்கப்பட்டு இருந்த இடைக்கால கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் கலைத்தது.

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக சஞ்சய் சிங் கடந்த ஆண்டு டிசம்பர் 21-ந் தேதி தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவரது தலைமையிலான நிர்வாகிகள் தன்னிச்சையாக தேசிய ஜூனியர் பயிற்சி முகாம் நடத்தப்படும் என்று அறிவித்ததை அடுத்து விதிமுறையை மீறி செயல்பட்டதாக கூறி இந்திய மல்யுத்த சம்மேளனத்தை மத்திய விளையாட்டு அமைச்சகம் இடைநீக்கம் செய்தது.

அத்துடன் இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாட பணிகளை கவனிக்க 3 பேர் கொண்ட இடைக்கால கமிட்டி நியமிக்கப்பட்டது. இந்த கமிட்டியினர் சமீபத்தில் தகுதி சுற்று போட்டியை நடத்தி ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கான இந்திய மல்யுத்த அணியை தேர்வு செய்தனர்.

இதற்கிடையே, புதிய நிர்வாகிகள் தேர்தலை குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்தாமல் காலதாமதம் செய்ததால் இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்து எடுத்த நடவடிக்கையை உலக மல்யுத்த சம்மேளனம் கடந்த பிப்ரவரி மாதம் வாபஸ் பெற்றது.

இந்த நிலையில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தை நிர்வகிக்க நியமிக்கப்பட்டு இருந்த இடைக்கால கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று கலைத்தது. இந்திய மல்யுத்த சம்மேளனம் மீதான இடைநீக்க நடவடிக்கையை உலக மல்யுத்த சம்மேளனம் ஏற்கனவே நீக்கியதை தொடர்ந்து இந்திய ஒலிம்பிக் சங்கம் இந்த முடிவை எடுத்தது. இதனால் இனி தேசிய மல்யுத்த நடவடிக்கைகளை

மேலும் செய்திகள்