< Back
பிற விளையாட்டு
சர்வதேச மல்யுத்த போட்டி: இந்திய வீரர் அமன் செராவத் வெண்கலப்பதக்கம் வென்றார்

Image Courtesy : ANI 

பிற விளையாட்டு

சர்வதேச மல்யுத்த போட்டி: இந்திய வீரர் அமன் செராவத் வெண்கலப்பதக்கம் வென்றார்

தினத்தந்தி
|
3 Feb 2023 1:38 AM IST

இந்திய வீரர் அமன் செராவத் அமெரிக்காவின் ஜானி ராய் ரோட்ஸ் ரிச்சர்ட்சை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.

ஜாரெப்,

ஜாரெப் ஓபன் ரேங்கிங் மல்யுத்த போட்டி குரோஷியா நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 57 கிலோ உடல் எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய வீரர் அமன் செராவத் 10-4 என்ற புள்ளி கணக்கில் அமெரிக்காவின் ஜானி ராய் ரோட்ஸ் ரிச்சர்ட்சை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.

அரியானாவை சேர்ந்த 17 வயது அமன் செராவத் கடந்த ஆண்டு நடந்த 23 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்