< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
மாமல்லபுரத்தில் நாளை முதல் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி
|13 Aug 2023 6:35 PM IST
மாமல்லபுரத்தில் சர்வதேச அலைச்சறுக்கு போட்டி நாளை தொடங்கி 20 -ம் தேதி வரை நடைபெற உள்ளது
மாமல்லபுரம்,
மாமல்லபுரத்தில் சர்வதேச அலைசறுக்கு போட்டி நாளை தொடங்கி, வரும் 20- ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க விழா சென்னையை அடுத்த கோவளத்தில் நடைபெற்றது. இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
இதில் இந்தியா தரப்பில் 15 வீரர்கள் உட்பட தாய்லாந்து, சிங்கப்பூர் மலேசியா, வங்கதேசம், மியன்மார், உள்ளிட்ட 12 நாடுகளை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட சர்வதேச அலை சறுக்கு வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
3000 தர புள்ளிகளை கொண்ட இந்த சர்வதேச போட்டியானது முதல் முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் உலக அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை வீரர்கள் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.