< Back
பிற விளையாட்டு
சென்னையில் சர்வதேச கோல்ப் சாம்பியன்ஷிப் தொடர் நாளை தொடக்கம் - சர்வதேச வீரர்கள் பங்கேற்பு
பிற விளையாட்டு

சென்னையில் சர்வதேச கோல்ப் சாம்பியன்ஷிப் தொடர் நாளை தொடக்கம் - சர்வதேச வீரர்கள் பங்கேற்பு

தினத்தந்தி
|
15 Aug 2023 2:11 PM IST

கோல்ப் தொடரை காண்பதற்கு நுழைவுக் கட்டணம் எதுவும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை நந்தனம் பகுதியில் உள்ள காஸ்மோ கோல்ப் கோர்ஸ் மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 16-ந்தேதி (நாளை) முதல் 19-ந்தேதி வரை இந்தியா சிமெண்ட்ஸ் புரோ சாம்பியன்ஷிப் கோல்ப் தொடர் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 123 தொழில்முறை கோல்ப் வீரர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோல்ப் விளையாட்டின் மீதான மக்களின் பார்வை மாறி வருவதாகவும், இதனை கிராமங்களுக்கு கொண்டு செல்ல சில காலங்கள் ஆகும் எனவும் தொழில்முறை கோல்ப் போட்டிகளுக்கான பி.ஜி.டி.ஐ. அமைப்பின் தலைமை செயல் அலுவலர் உத்தம் சிங் முண்டி தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் நடக்கும் கோல்ப் தொடர் போட்டிகளை காண்பதற்கு நுழைவுக் கட்டணம் எதுவும் கிடையாது என்றும், பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்