< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
சர்வதேச பேட்மிண்டன் தரவரிசை - இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் முன்னேற்றம்
|28 Sep 2022 3:39 AM GMT
சர்வதேச பேட்மிண்டன் தரவரிசையில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் முன்னேறி உள்ளார்.
பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசைபட்டியலை சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று வெளியிட்டது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் 9-வது இடத்தில் தொடருகிறார். இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த் ஒரு இடம் முன்னேறி 11-வது இடத்தையும், எச்.எஸ்.பிரனாய் ஒரு இடம் உயர்ந்து 15-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
பிரனாய் 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் 'டாப்-15' இடத்துக்குள் நுழைந்துள்ளார். பெண்கள் ஒற்றையர் பிரிவில், காயம் காரணமாக உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஜப்பான் ஓபன் போட்டியில் இருந்து விலகிய இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து மாற்றமின்றி 6-வது இடத்தில் நீடிக்கிறார். சாய்னா நேவால் 31-வது இடம் வகிக்கிறார்.