< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
சர்வதேச பேட்மிண்டன்; இந்திய வீரர் பிரியன்ஷூ ரஜாவத் அரையிறுதியில் தோல்வி
|3 Dec 2023 2:49 PM IST
இந்த தொடரின் பெண்கள் இரட்டையர் இறுதிப்போட்டிக்கு தனிஷா க்ராஸ்டோ மற்றும் அஷ்வினி பொன்னப்பா ஜோடி முன்னேறியுள்ளது.
லக்னோ,
சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் பிரியன்ஷூ ரஜாவத், சீன தைபேயின் சி யூ ஜீனை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் முதல் செட்டை கைப்பற்றிய ரஜாவத் அடுத்த இரு செட்டுகளை இழந்து தோல்வியடைந்தார். 1 மணி 14 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் பிரியன்ஷூ ரஜாவத் 21-18, 14-21, 17-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெளியேறினார்.
இந்த தொடரின் பெண்கள் இரட்டையர் இறுதிப்போட்டிக்கு தனிஷா க்ராஸ்டோ மற்றும் அஷ்வினி பொன்னப்பா ஜோடி முன்னேறியுள்ளது.