< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
உலக இறுதி சுற்று பேட்மிண்டன்: 'நம்பர் ஒன்' வீரருக்கு அதிர்ச்சி அளித்தார் பிரனாய்
|10 Dec 2022 3:38 AM IST
7-வது முறையாக ஆக்சல்சென்னுடன் மோதிய பிரனாய் அதில் பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.
பாங்காக்,
உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. 'டாப்-8' வீரர்கள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்த இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் தனது கடைசி லீக்கில் 'நம்பர் ஒன்' வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான விக்டர் ஆக்சல்சென்னை (டென்மார்க்) எதிர்கொண்டார்.
51 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் பிரனாய் 14-21, 21-17, 21-18 என்ற செட் கணக்கில் விக்டர் ஆக்சல்சென்னுக்கு அதிர்ச்சி அளித்து ஆறுதல் வெற்றி பெற்றார். 7-வது முறையாக ஆக்சல்சென்னுடன் மோதிய பிரனாய் அதில் பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். இந்த தொடரில் முதல் 2 ஆட்டங்களில் தோல்வி கண்ட பிரனாய் ஏற்கனவே அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.