< Back
பிற விளையாட்டு
சர்வதேச தடகள தொடர்.. ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்பாரா.?

கோப்புப்படம் 

பிற விளையாட்டு

சர்வதேச தடகள தொடர்.. ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்பாரா.?

தினத்தந்தி
|
21 Aug 2022 6:41 PM IST

வருகிற 26ம் தேதி சுவிட்சர்லாந்தில் சர்வதேச தடகளப் போட்டிகள் நடைபெற உள்ளன.

புதுடெல்லி,

சுவிட்சர்லாந்தில் நடைபெறும் சர்வதேச தடகள தொடரில், ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா முழு உடற்தகுதியை எட்டினால் கலந்துகொள்வார் என இந்திய தடகள சம்மேளனத் தலைவர் கூறி உள்ளார்.

வருகிற 26ம் தேதி சுவிட்சர்லாந்தில் சர்வதேச தடகளப் போட்டிகள் நடைபெற உள்ளன. காயம் காரணமாக காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்காத ஈட்டியெறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, சர்வதேச தடகள தொடரில் பங்கேற்பாரா என்ற கேள்வி நீடிக்கிறது.

இந்நிலையில், காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்து இருந்தால், நீரஜ் சோப்ரா தடகள தொடரில் பங்கேற்பார் என தடகள சம்மேளனத் தலைவர் சுமரிவாலா தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்