< Back
பிற விளையாட்டு
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: சாத்விக் சாய்ராஜ் - சிராஜ் ஷெட்டி இணை சாம்பியன்...!

Image Courtesy: @BAI_Media

பிற விளையாட்டு

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: சாத்விக் சாய்ராஜ் - சிராஜ் ஷெட்டி இணை சாம்பியன்...!

தினத்தந்தி
|
18 Jun 2023 3:29 PM IST

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ்-சிராஜ் ஷெட்டி இணை சாம்பியன் பட்டம் வென்றது.

ஜகர்த்தா,

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி சரிவில் இருந்து மீண்டு வந்து 17-21, 21-19, 21-18 என்ற செட் கணக்கில் தென்கொரியாவின் மின் ஹூக் காங்-சென் ஜாய் சோ இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த ஆட்டம் 1 மணி 7 நிமிடம் நீடித்தது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ் பிரனாய் 15-21, 15-21 என்ற நேர்செட்டில் ஒலிம்பிக் சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான விக்டர் ஆக்சல்செனிடம் (டென்மார்க்) தோல்வி கண்டு நடையை கட்டினார்.

இந்நிலையில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை மலேசிய உலக சாம்பியன் ஆரோன் சியா-சோ வூய் யிக் இணையை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாத்விக் சாய்ராஜ் - சிராஜ் ஷெட்டி இணை 21-17, 21-18 என்ற நேர் செட் கணக்கில் ஆரோன் சியா-சோ வூய் யிக் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.



மேலும் செய்திகள்