< Back
பிற விளையாட்டு
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த், லக்ஷயா சென் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

Lakshya Sen (image courtesy: BAI via ANI)

பிற விளையாட்டு

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த், லக்ஷயா சென் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
15 Jun 2023 4:23 AM IST

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது.

ஜகர்த்தா,

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-13, 21-19 என்ற நேர்செட்டில் சீனாவின் லூ குயாங் சூவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் காமன்வெல்த் சாம்பியனான இந்திய வீரர் லக்ஷயா சென் 21-17, 21-13 என்ற நேர்செட்டில் உலக தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள லீ ஜி ஜியாவை (மலேசியா) விரட்டியடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். அடுத்த சுற்று ஆட்டத்தில் ஸ்ரீகாந்த்-லக்ஷயா சென் மோதுகிறார்கள். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் பிரியான்ஷூ ரஜாவத்தை எதிர்த்து ஆட வேண்டிய குன்லாவுத் விதித்சரண் (தாய்லாந்து) கடைசி நேரத்தில் விலகியதால் போட்டியின்றி பிரியான்ஷூ ரஜாவத் 2-வது சுற்றை எட்டினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆகார்ஷி காஷ்யப் 10-21, 4-21 என்ற நேர்செட்டில் தென்கொரியாவின் அன் சி யோங்கிடம் தோற்று வெளியேறினார்.

மேலும் செய்திகள்