< Back
பிற விளையாட்டு
பிற விளையாட்டு
ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய கைப்பந்து அணி அறிவிப்பு
|6 Aug 2022 4:42 AM IST
ஆசிய கைப்பந்து கூட்டமைப்பு கோப்பைக்கான ஆண்கள் கைப்பந்து போட்டி தாய்லாந்தில் உள்ள நகோன் பதோம் நகரில் நாளை நடக்கிறது.
சென்னை,
ஆசிய கைப்பந்து கூட்டமைப்பு கோப்பைக்கான ஆண்கள் கைப்பந்து போட்டி தாய்லாந்தில் உள்ள நகோன் பதோம் நகரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 14-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய கைப்பந்து அணியை, இந்திய கைப்பந்து சம்மேளன பொதுச்செயலாளர் அனில் சவுத்ரி அறிவித்துள்ளார். இந்திய அணி வருமாறு:-
துஷ்யந்த் சிங் (கேப்டன்), ஜோஷ்நூர் தின்ட்சா, சந்தீப், அஜய்குமார், சமீர் சவுத்ரி, தனிஷ் சவுத்ரி, ஹர்ஷித் கிரி, அமன் குமார், ஜிபின் ஜோப், சச்சின் தாகர், மன்னாத் சவுத்ரி, அஜீத் ஷேகோ, கார்த்திகேயன், சூர்யபிரகாஷ் பன்ஜரா, தலைமை பயிற்சியாளர்: ஜி.இ.ஸ்ரீதரன், உதவி பயிற்சியாளர்கள்: ராஜேஷ் குமார், பிரவீன் ஷர்மா, மானேஜர்: குல்திப் ராஜ் மகோத்ரா.