< Back
பிற விளையாட்டு
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணி தேர்வு தகுதி போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்

கோப்புப்படம்

பிற விளையாட்டு

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணி தேர்வு தகுதி போட்டி திட்டமிட்டபடி நடைபெறும்

தினத்தந்தி
|
17 Aug 2023 10:31 AM IST

காயம் காரணமாக நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத் ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து விலகி உள்ளார்.

புது டெல்லி,

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த மாதம் செர்பியாவில் நடக்கிறது. இதற்கான இந்திய அணி தேர்வுக்கான தகுதி போட்டி பாட்டியாலாவில் வருகிற 25, 26 ஆகிய தேதிகளில் நடக்க இருக்கிறது. காயம் காரணமாக நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத் ஆசிய விளையாட்டு போட்டியில் இருந்து விலகி இருப்பதால் இந்த தேர்வுக்கான தகுதி போட்டி நடைமுறையில் மாற்றம் வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இது குறித்து மல்யுத்த சம்மேளனத்தை நிர்வகிக்கும் ஒலிம்பிக் சங்க இடைக்கால கமிட்டி நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்புக்கான இந்திய அணி தேர்வு தகுதி போட்டி திட்டமிட்டபடி நடைபெறும். எல்லா எடைப்பிரிவினருக்கும் தகுதி போட்டி நடைபெறும்' என்றார்.

மேலும் செய்திகள்