< Back
பிற விளையாட்டு
ஆசிய ஸ்குவாஷ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

கோப்புப்படம்

பிற விளையாட்டு

ஆசிய ஸ்குவாஷ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

தினத்தந்தி
|
11 May 2024 2:57 AM IST

ஆசிய ஸ்குவாஷ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

22-வது ஆசிய அணிகள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவில் உள்ள டாலியன் நகரில் அடுத்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய ஸ்குவாஷ் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

நடப்பு தேசிய சாம்பியனான வேலவன் செந்தில்குமார் தலைமையிலான இந்திய அணியில் அபய் சிங், ராகுல் பாய்தா, சுரஜ் சந்த் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ராதிகா சீலன் தலைமையிலான இந்திய பெண்கள் அணியில் பூஜா ஆர்த்தி, சுனிதா பட்டேல், ஜானெட் விதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்