காமன்வெல்த் விளையாட்டுக்கான இந்திய நீச்சல் அணி அறிவிப்பு
|காமன்வெல்த் நீச்சலில் இந்தியா இதுவரை பதக்கம் வென்றதில்லை.
புதுடெல்லி,
காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் அடுத்த மாதம் (ஜூலை) 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய நீச்சல் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணியில் சஜன் பிரகாஷ், ஸ்ரீஹரி நடராஜ், குஷக்ரா ராவத், அத்வைத் பேஜ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
கேரளாவை சேர்ந்த சஜன் பிரகாஷ் 200 மீட்டர், 100 மீட்டர் மற்றும் 50 மீட்டர் பட்டர்பிளை பந்தயத்தில் பங்கேற்க இருக்கிறார். அவர் காமன்வெல்த் போட்டியில் கலந்து கொள்ள இருப்பது 3-வது முறையாகும். கர்நாடகாவை சேர்ந்த ஸ்ரீஹரி நடராஜ் 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர் பேக்ஸ்டிரோக் பிரிவில் நீந்துகிறார்.
டெல்லியை சேர்ந்த குஷக்ரா ராவத், மத்தியபிரதேசத்தின் அத்வைத் பேஜ் ஆகியோர் 1,500 மீட்டர் பிரீஸ்டைல் பந்தயத்தில் பங்கேற்கிறார்கள். காமன்வெல்த் நீச்சலில் இந்தியா இதுவரை பதக்கம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.