< Back
பிற விளையாட்டு
உலக மகளிர் குத்துச்சண்டை: இந்தியாவின் ஸ்வீட்டி போரா தங்கம் வென்று சாதனை...!
பிற விளையாட்டு

உலக மகளிர் குத்துச்சண்டை: இந்தியாவின் ஸ்வீட்டி போரா தங்கம் வென்று சாதனை...!

தினத்தந்தி
|
25 March 2023 8:56 PM IST

சீன வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் ஸ்வீட்டி போரா தங்கம் வென்று சாதனைபடைத்தார்.

டெல்லி,

13-வது உலக மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில், 81 கிலோ பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

இதில், இந்தியாவின் ஸ்வீட்டி போரா சீனாவின் வாங் லீனாவை எதிர்கொண்டார். பரபரப்பான நடந்த இந்த ஆட்டத்தில் சீன வீராங்கனை லீனானை 4-3 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் ஸ்வீட்டி போரா தங்கப்பதக்கம் வென்று சாதனைபடைத்தார்.

81 கிலோ எடைப்பிரிவில் சீன வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் ஸ்வீட்டி போராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

முன்னதாக ஏற்கனவே நடந்த 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நிது கங்காஸ் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்